மாவட்ட செய்திகள்
காட்பாடி 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா துரித நடவடிக்கை : பொதுமக்கள் பாராட்டு!

காட்பாடி காங்கேயநல்லூரிலிருந்து வி.ஐ.டி.,க்கு செல்லும் சாலையில் இருபுறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதால் தொற்று நோய்கள் பரவும் சூழல் இருப்பதாக புகார் வந்தது.இந்த புகாரின் பேரில், உடனடியாக சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமையில், தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த துப்புரவு பணிகள் நடைபெற்று வருவதை காட்பாடி மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் . அவருடன் வார்டு 10 அதிமுக மாமன்ற உறுப்பினர் கே.பி.ரமேஷ், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். இந்த பணியை பார்த்து சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமாருக்கு அப்பகுதிமக்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
