BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு முறை விழிப்புணர்வு முகாம்,

அரசு மருத்துவமனை ,அரசு அலுவலகங்களில் தீ பரவல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறையினர் செய்து வருகின்றன ,இந்நிலையில் கடந்த மாதம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அதிக வெப்பத்தின் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்தது,அப்போது அங்கிருந்த பணியாளர்களும் பொதுமக்களும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்,இதனால் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் இன்றி தடுக்கப்பட்டது,

அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஆணைக்கிணங்கbசேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் விரைவில் தீப்பற்றக்கூடிய அறையில் தீ விபத்து ஏற்பட்டால் தற்காப்புக்காக தீயை எப்படி அனைப்பது குறித்தும் விழிப்புணர்வு முகாம் மூலம் செய்முறை காட்சியில் அரசு மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் மற்றும் செவிலியர்களிடம் செய்து காண்பித்தனர்,இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களும் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )