மாவட்ட செய்திகள்
தரங்கம்பாடி பகுதியில் விளைநிலத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை.

தரங்கம்பாடி பகுதியில் விளைநிலத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை, உடனடியாக உறவினர்கள் மீட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் கூடலூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி பின்புறத்தில் 100 நாள் பணிக்காக நல்லுச்சேரி கீழத் தெருவை சேர்ந்த சகிலா வயது 32 கணவர் ஏசுராஜ் என்ற பெண் தனது மகன் சத்தி 4 வயது குழந்தையுடன் பணிக்குச் சென்று உள்ளார். சகிலா தனது குழந்தையை ஓரமாக அமரவைத்து விட்டு பணி செய்துள்ளார்.

பள்ளியின் பின்புறம் தட்சிணாமூர்த்தி என்பவர் தனது விளை நிலத்தில் 10 நாட்களுக்கு முன்பு போர்வெல் அமைத்து நீர் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து பின்னர் அங்கே நீர் இல்லாததால் ஆழ்துளை கிணறு மூடாமல் விட்டுச் சென்றிருக்கிறார். பள்ளியின் பின்புறம் விளையாட சென்ற குழந்தை குழிக்குள் தவறி விழுந்துள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டு 100 நாள் பணியில் இருந்த அனைவரும் ஓடிச் சென்று உடனே குழந்தையை மீட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
