BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலை அருகே முன்னறிவிப்பின்றி விவசாயிகளின் மின் இணைப்புகள் துண்டிப்பு.

உடுமலை அருகே முன்னறிவிப்பின்றி விவசாயிகளின் மின் இணைப்புகள் துண்டிப்பு -கோட்டாட்சியர் வாகனம் சிறைப்பிடிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அரசு கலைக்கல்லூரி பகுதியில் உடுமலை கால்வாய் சென்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றம் அறிவுறுத்துதல் படி கால்வாய் ஓரம் உள்ள மின் இணைப்புகள் தூண்டிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதாவது பிரதான கால்வாயில் இருந்து 50 மீட்டரூம் , கிளை கால்வாயில் இருந்து 25 மீட்டருக்குள் உள்ள மின் இணைப்புகளை துண்டிக்கபட்டு வரும் நிலையில் உடுமலை கால்வாய் கரையோரப் பகுதியில் குருசாமி , ரவிச்சந்திரன் என்ற விவசாயிகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் வணிக பயன்பாட்டிற்கு மின்சாரம் முறையாக ஊராட்சி , பொதுப்பணித்துறை நிர்வாகத்துடன் தடையின்மை சான்றிதழ் பெற்று இருந்தும் எந்தவித முன்னறிவிப்புமின்றி உடுமலை வருவாய் கோட்டாட்சியர் கீதா தலைமையில் பொதுப்பணித்துறை , மின்சாரத்துறை , காவல்துறை ஆகியவை ஓன்றினைந்து மின் இணைப்புகளை துண்டித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறும்போது. எந்தவித முன்னறிவிப்புமின்றி மின்சார இணைப்புகளை தற்பொழுது துண்டித்து வருகின்றனர். இதனால் விவசாயம் செய்வதற்கும் , கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கும் உட்பட பல்வேறு தேவைகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தனர்.

அப்போது அங்கு இருந்த கோட்டாச்சியர் வாகனத்தை வழிமறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர் அரை மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு விவசாயிகள் தரப்பில் நீதிமன்றத்திற்குச் செல்ல முடிவு எடுக்கப்பட்டதால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )