மாவட்ட செய்திகள்
துவங்கியது பத்தாம் வகுப்பு தேர்வு – திருச்சியில் 35,253 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மே 30வரையிலும் நடைபெற உள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 17,713 மாணவர்களும், 17,540 மாணவிகளும் என மொத்தம் 35,253 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
இதற்காக 165 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வு நடத்துவதற்கு 165 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 165 துறை அலுவலர்களும், 2,099 அறை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தனித் தேர்வர்கள் மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை 4மையங்களிலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 5மையங்களிலும் எழுத உள்ளனர்.
அத்துடன் திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஒரு மையத்தில் சிறை தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் முறைகேடுகளை தடுக்க 270 ஆசிரியர்கள் நிலையான, பறக்கும் படை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு நடைபெறும் நேரம் முழுவதும், மையத்திலேயே தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாக மாணவ – மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அவர்கள் தேர்வறையில் எப்படி நடக்க வேண்டும் கேள்வித்தாளை எப்படி அணுக வேண்டும் என அறிவுரை கூறி வாழ்த்து தெரிவித்து அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர் சுமார் 10 மணி அளவில் அவர்களுக்கு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. அதனை மாணவ மாணவிகள் ஐந்து நிமிடம் கேள்வித்தாளை படித்துப் பார்த்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு பதில் எழுத தாள்கள் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவிகள் தேர்வு எழுதத் தொடங்கினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
