மாவட்ட செய்திகள்
கன்னியா குமரி மாவட்டத்தில் 115 மையங்களில் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று நடந்தது.
குமரி மாவட்டத்தில் 115 மையங்களில் தேர்வு நடந்தது. இதைத்தொடர்ந்து தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டது. 11 ஆயிரத்து 697 மாணவர்களும் 11 ஆயிரத்து 587 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 284 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு இன்று தொடங்கி யதையடுத்து காலை 9 மணிக்கு மாணவ-மாணவி கள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர். தேர்வு எழுத வந்த பெரும்பாலான மாணவ- மாணவிகளை தங்களது பெற்றோர் அழைத்து வந்து தேர்வு மை யத்தில் விட்டு சென்றனர். தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள் பள்ளி வளாகத்தில் இருந்து பாடப்புத்த கங்களை படித்தனர்.பின்னர் 9.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
