மாவட்ட செய்திகள்
தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி.

தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு தாலுகா கீழவன்னிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் விவசாயி வயது 40 இவர் நேற்று மாலை தான் வளர்க்கும் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக பக்கத்து ஊரான அருமலை பகுதியில் தென்னந்தோப்பில் புல் அறுப்பதற்காக சென்றுள்ளார் அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பி மீது கனகராஜ் மீது பட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கனகராஜ் இறந்துள்ளார் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக சென்ற கனகராஜ் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை இவரது மனைவி சரண்யா சந்தேகமடைந்த அருகிலுள்ள பகுதிகளில் தேடி வந்துள்ளார் அப்போது அருமலை தென்னந்தோப்பில் கனகராஜ் இறந்து கிடப்பது தெரியவந்தது தகவலறிந்த பாப்பாநாடு போலீசார் தற்போது கனகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தற்போது உள்ள திமுக அரசுக்கு பலமுறை இந்த பகுதியில் மின்சார கம்பி தாழ்வாக உள்ளது அதை சரி செய்ய வேண்டும் பலமுறை திமுக அரசு இடம் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை தற்போது ஒரு உயிர் போய்விட்டது என்று தெரிவிக்கின்றனர். கனகராஜ் 15 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இதேபோல் மின்சாரத்தினால் தற்போது தஞ்சை மாவட்டம் களிமேடு பகுதியில் கடந்த வாரம் தேர் மின்சார தீ விபத்தில் 11 பேர் இறந்துள்ளனர் தற்போது ஒரத்தநாட்டில் விவசாயி இறந்துள்ளார் திமுக அரசு இதை இன்னும் கண்டுகொள்ளவில்லை மின்சாரத்துறை தாழ்வான மின்சார கம்பிகளை அகற்றவில்லை இதுவரை சரி செய்யவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
