BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நிலக்கோட்டை டீ கடையில் விற்பனை செய்த உளுந்த வடையில் ரப்பர் பேண்ட் இருந்ததால் அதிர்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள நூத்துலாபுரத்தை சேர்ந்த முனியாண்டி வயது 48. இவர் ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். இவர் மதியம் நிலக்கோட்டை நால்ரோடு அருகே உள்ள ஒரு டீக்கடையில் தனது குழந்தைகளுக்கு 5 உளுந்த வடை வாங்கி உள்ளார். அந்த உளுந்த வடையை வாங்கிக்கொண்டு நேராக வீட்டிற்குச் சென்று பிரித்தபோது ஒரு வடையில் ரப்பர் பேண்ட் இருந்தது. இதனைப் பார்த்த முனியாண்டி அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து நேராக முனியாண்டி நிலக்கோட்டை நால்ரோடு அருகே உள்ள கடையில் இதுபற்றிய விவரத்தை கூறி இப்படி ரப்பர்பேண்டை எல்லாம் கலந்து விற்பனை செய்தால் குழந்தைகள் பாதிக்கும் அல்லவா? என்று கேட்டுள்ளார். இதற்கு டீக்கடைக்காரர் மிகவும் அவமரியாதையாக கூறி முனியாண்டி மிரட்டி அனுப்பி விட்டார். இதுகுறித்து உடனடியாக முனியாண்டி நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலக அதிகாரிகளிடம் முறையாக மனு கொடுத்துள்ளார் . எனவே இதுபோன்று டீக்கடை மற்றும் ஓட்டல்களில் முறையாக சுகாதாரமாக உணவுப் பொருட்கள் தயார் செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )