BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்து தொடர்பாக ஒரு நபர் குழு விசாரணை பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும்- ஓ. பன்னீர்செல்வம்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்து தொடர்பாக ஒரு நபர் குழு விசாரணை பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் என்றார் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம்.

களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் விபத்தில் உயிரிழந்த 11 பேர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் காயமடைந்த இருபத்தி நான்கு நபர்களுக்கு 25 ரூபாயும் காசோலையாக வழங்கினார். பின்பு பாதிக்கப்பட்ட தேரினை ஆய்வு செய்த அவர் அளித்த பேட்டி களிமேடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு விசாரணை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் முழுமையாக நடத்தப்பட வேண்டும். இதில் கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். அக்குடும்பங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதிமுக 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தியது. அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களை இப்போதைய திமுக ஆட்சியில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஓராண்டு காலத்தில் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. நீண்டகால, குறுகியகால சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின் தடை இருக்கும் என்பது இந்த ஆட்சியிலும் நிரூபித்துள்ளனர். மொத்தத்தில் இந்த ஆட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது என்றார் ஓ. பன்னீர்செல்வம். அப்போது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )