BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்று ஓராண்டு நிறைவு, ஓராண்டு சாதனை மலர் – மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் சாதனைகள் அடங்கிய ஓராண்டு சாதனை முலரை மாவட்ட ஆட்சியர் இரா.லலீதா வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குவர் எஸ்.முருகன்னன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி, அனைத்து துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் சாதனைகள் அடங்கிய ஓராண்டு சாதனை மலரை வெளியீட்டு – மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவியேற்று ஓரண்டு கால முடிந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சாதனைகளை தொகுப்பாக வழங்கி மலராக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் முன்னேற்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் மற்றும் கொரோனா (Covid-19) முடிந்ததும் தமிழக அரசின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பல்வேறு சிறப்பான திட்டங்களும், பல்வேறு துறைகளின் அலுவல்கங்கள் உருவாக்கமும் நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலமாக ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைகள்நுறை, சுகாதார துறை, கல்வி துறை, சமூகநலத்துறை, வேலைவாய்ப்புத்துறை லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் வேளான் துறைகளை உருவாக்கி மாவட்ட அளவில் இவை அனைத்து துறை அலுவலகம் மற்றும் அதிகாரிகள் பதவியேற்றுள்ளார்கள். தற்போது ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அமைப்பதற்கு ஆணை வழங்கப்பட்டு கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக வேலை முடிவடைய உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு சேர்த்த தியாகிகளான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மற்றும் மாயூரம் வேதநாயகம்பிள்ளை ஆகியோர்களின் நினைவாக சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவும் வருங்காலங்களில் சிறப்பாக அமையும். மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக அமைந்துள்ள பூம்புகார் கற்றால மையம் மேம்படுத்துவதற்கு ரூ.25.8 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை (DPR) தயார் செய்து நீதி ஒதுக்கப்பட்டுள்ளது. பூம்புகார் சுற்றுலா மையம் உலகளவில் சுற்றுலா தளமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியில் 6 குளங்கள் மற்றும் 2 பூங்கா மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டு, வருங்காலத்தில் அனைத்து குளங்கள் மற்றும் பூங்காக்கள் மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மயிலாடுதுறை நகராட்சி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இளைஞர்கள். குழந்தைகள் மற்றும் அனைத்து மக்களும் அறினை வளர்த்துக்கொள்ள ஒருகிணைந்த அறிவுசார் வளாகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மயிலாடுதுறை நகராட்சியில் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த வருடம் மற்றும் இந்த வருடமும் சிறப்பு தூர்வாரும் திட்டம் நடைபெற்றுவருகிறது. கடந்த வருடம் தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவுப்பெறும். சுடந்த ஏப்ரல் 24-ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகள் சுமார் 850 கி.மீ தூரம் ரூ.8.7 கோடி மதிப்பீட்டில் பணியாணை வழங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை சார்பாக நடைப்பெற்று வரும் இப்பணிகள் இதுவரை 20 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. ஊரசு வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பாக சிறு ஏரி மற்றும் குளங்களின் நீர்வரத்து கால்வாய்கள் 1880 கி.மீ நீளம் தூர்வாரப்பட ஆணை வழங்கப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சார்பாக இப்பணிகள் மழை காலத்திற்கு முன்பாக பணிகள் நடைபெரும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க தமிழக அரசு வழிகாட்டுதலின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரசின் புது புது திட்டங்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்க்கு கொண்டு வரப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவீச்சந்திரன், உதவி மக்களி’ தொடர்பு அலுவலர் (செய்தி) அஸ்வீன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )