BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி, திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, இனிப்புகளை வழங்கினார்.

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்கள் சார்பில் திருவெறும்பூரில் ஓராண்டு நிறைவு சாதனை கொண்டாடப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏ., வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சேகரன் தலைமை வகித்து பஸ் பயணியர், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்ககளுக்கு திமுக அரசின் ஓராண்டு சாதனைகளைக் கூறி இனிப்புகளை வழங்கினார். அப்போது நிர்வாகிகள் கருணாநிதி, செல்வராஜ், மாரியப்பன், VPகுமார், கருணாநிதி, பரமசிவம், மாமுண்டி, சத்யா, கயல்விழி, ஞானதீபம், சுருளிதுரை உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )