மாவட்ட செய்திகள்
வாணியம்பாடி தமிழக ஆந்திரா காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 1500லிட்டர் கள்ள சாராய ஊரல் மற்றும் கள்ளசாராயம் அடுப்புகள் அழிப்பு.
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 1500 லிட்டர் கள்ள சாராய ஊரல் மற்றும் கள்ளசாராயம் அடுப்புகள் அழிப்பு.
சாராயம் காய்ச்சும் கும்பலை சேர்ந்த 3 பேர் தலைமறைவு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லைப்பகுதியான கோரிபள்ளம், மாதகடப்பா, தேவராஜபுரம், கொரிபாள்ளம் உள்ளிட்ட மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மற்றும் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி ஆகியோர் இரண்டு பிரிவுகளாக போலிசார் குழு அப்பகுதிகளில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டு நடத்திய அதிரடி சோதனையில் 1500 லிட்டர் கள்ள சாராய ஊரல், கள்ள சாராயம் மற்றும் சாராய அடுப்புகள் கண்டறிந்து அதனை அழித்தனர்.
மேலும் போலீசார் வருவதை அறிந்து தப்பி ஓடி தலைமறைவான சாராயம் காய்ச்சும் கும்பலை சேர்ந்த அன்பரசன், காளிதாஸ், சிவகுமார் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.