BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தொழிலதிபரை, மனைவியுடன் கொன்று புதைத்த கார் டிரைவர்!! மயிலாப்பூரில் பயங்கரம்.

சென்னை மயிலாப்பூர் துவாகர நகரில் வசித்து வருபவர் 58 வயது ஸ்ரீகாந்த். இவர் குஜராத்தில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில்பதிரும் கூட. இவருடைய மனைவி 53 வயது அனுராதா. ஸ்ரீகாந்துக்கு மாமல்லபுரத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது.ஸ்ரீகாந்திடம் கார் டிரைவராக பணிபுரிந்து வருபவர் 30 வயது கிருஷ்ணன். இவர் நேபாளத்தை சேர்ந்தவர். இவரே ஸ்ரீகாந்த் வீட்டின் அனைத்து பராமரிப்பு பணிகளையும் அவரே செய்து வந்தார். அவருடைய கண்காணிப்பில் வீட்டை ஒப்படைத்து விட்டு அமெரிக்காவில் வசிக்கும் மகளை பார்க்க தம்பதியினர் இருவரும் அமெரிக்கா சென்றிருந்தனர்.

 

2 மாதம் கழித்து நேற்று தான் அவர்கள் அமெரிக்காவில் இருந்து திரும்பியிருந்தனர். விமான நிலையத்தில் இருந்து டிரைவரே அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார். விமானத்தில் கிளம்பிய பெற்றோர் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்களா? என்பதை அறிந்து கொள்ள அவருடைய மகள் அமெரிக்காவில் இருந்து மொபைலில் தொடர்பு கொண்டார்.தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தும் இருவரும் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் இருந்து ஸ்ரீகாந்த் மகள் சுனந்தா பதறி போனார். உடனே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி மயிலாப்பூர் போலீசார் அவர்களுடைய வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தனர் வீடு முழுவதும் ரத்தக்கறையாக இருந்தது. உடனடியாக போலீசார் கமிஷனருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கமிஷனர் அமெரிக்காவில் உள்ள மகள் சுனந்தாவிடம் தொலைபேசியில் பேசி விபரம் அறிந்து கொண்டார். அவர் தனது பெற்றோரை டிரைவர் கிருஷ்ணன்தான் கவனித்து வருகிறார் எனக் கூறி கிருஷ்ணனின் செல்போன் எண்ணை கமிஷனரிடம் கொடுத்தார். அந்த எண்ணுக்கு போலீசார் தொடர்புகொண்டனர். ஆனால் கிருஷ்ணன் பதில் அளிக்கவில்லை.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.b

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )