BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேசிய அளவில்2 ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்ற உடுமலை தடகள வீரர்.

தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மனோகரன் (எ) செல்வத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன உடுமலையை சேர்ந்த சேர்ந்த மனோகரன் R (எ)செல்வம் இந்த ஆண்டு வயதுமூத்தோர்கான தேசியஅளவிலான போட்டிகளில் தடகள பிரிவுகளில் (1) 5000 மீட்டர் ஒட்டத்தில் இரண்டாவது இடம் பெற்று வெள்ளி பதக்கமும், (2) 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்று வெண்கல பதக்கமும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
தடை தாண்டி ஓடும் பிரிவில் தற்போது தான் முதல் முதலாக பங்கு கொள்கிறார், 1500 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார் அதே நேரத்தில் ஹாக்கி போட்டியும் நடந்ததால் 1500 மீட்டர் ஓட்டத்தில் பங்கு பெறமுடியவில்லை. எனவே ஹாக்கி போட்டி முடிந்த பின் 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் கலந்துகொண்டு எந்த முன் அனுபவம் / பயிற்சி இல்லாமலே மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்று உள்ளார்.

மேலும் ஹாக்கி போட்டியில் நமது தமிழ் நாடு அணி இரண்டும் இடம் பெற்று வெள்ளிபதக்கம் பெற இவரது சிறப்பான ஆட்டம் முக்கியமான ஒரு காரணம்.
இவர் இந்த ஆண்டு மட்டும் அல்ல பல ஆண்டுகளாகவே தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு தமிழ் நாட்டுக்கும் நமது ஊருக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
58 வயதில் இவரின் இத்தகு அனைவருக்கும் சாதிக்கவேண்டும் என்று நம்பிக்கை தருகிறது. இவரின் இத்தகைய வெற்றிகளை அறிந்து இன்றைய இளையர்கள் இவரை உதாரணமாக கொண்டால் தாங்களும் தங்கள் உடல் & மனதை நல்ல முறையில் ஆரோக்கியமக வைத்து கொள்ளலாம். அதற்கு அவரிடம் ஆலோசனை மற்றும் பயிற்சியும் எடுத்து கொள்ளாம். பயிற்சி அளிக்க அவர் விருப்பமாகவே உள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )