மாவட்ட செய்திகள்
காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு.
காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரியின் முதல்வர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. சைபர் கிராம் சம்பந்தமாகவும் மேலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவும் பெண்கள் அதிகம் பாலியல் தொல்லையில் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் மேலும் பொருளாதார ரீதியில் பணத்தை இழத்தல் அமைதியை இழத்தல் போன்ற நடவடிக்கைகளில் இருந்து மீண்டு வருவதற்கு இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மேலும் இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள் மனதளவிலும் குடும்ப அளவிலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்கும் விதமாகவும் மேலும் இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள் அதிக தற்கொலைக்கு ஆளாவதை தடுக்கும் விதமாகவும் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் மேரி கிரிஸ்டியன் பால் கலந்து கொண்டார்கள். மேலும் காரைக்கால் மாவட்ட N.S.S. ஒருங்கிணைப்பாளர் முனைவர். லட்சுமனபதி மற்றும் N.S.S அதிகாரிகளான முனைவர். ஷெர்லி மற்றும் சிவராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.