மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூபாய் 6 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது, அதிநவீன தீவிர சிகிச்சை முகாம் துவங்கப்பட்டுள்ளது அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப படும் எனக் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் மணிகண்ணன் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக் குமார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திமுக ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன் ராஜவேல் நகர செயலாளர் டேனியல் ராஜ் உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் திருநாவுக்கரசு மருத்துவ அலுவலர் நளினி போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.