BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தாலுக்காகளில் நடப்பாண்டு 70 ஆயிரம் ஹேக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது.

மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய 4 தாலுக்காகளிலும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் மார்ச் மாதம் முதல் மாவட்டத்திலுள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் படிப்படியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக நிலையங்களில் இருந்து அகற்றப்படாமல், அங்கேயே தார்ப்பாய்கள் மூலம் மூடி வைக்கபட்டிருந்தது. இந்தநிலையில் 7/05/2022 இரவு பெய்த திடீர் மழையால் நனைந்து நெல் நனைந்து ஈரமாகிவிட்டது. கிராமத்தில் இருப்பதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் பாதுகாப்பாக இல்லை எனவும் வைக்க போதிய கிடங்கு வசதி இல்லாததால் நெல் மூட்டைகள் ஒருசில நேரடி கொள்முதல் நிலையங்கலிலேயே
வைக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை நிலையத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து உள்ளன. மழையில் நெல் மூட்டைகள் நனைவதால் நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகள் மூலம் கிடங்களுக்கு ஏற்றிச் செல்ல வேண்டும். தவறும்பட்சத்தில் நனைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் முளைக்க தொடங்கிவிடும் என்றும் விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )