மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிரை சிறப்பிக்கும் விதமாக
உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கர்நாடக-ரெய்ஸ் குளோபல் தலைவர் மீரா வெங்கட் மற்றும் தஞ்சாவூர்-பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீவித்யா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் கே.தனலட்சுமி அம்மாள், முதன்மை தலைவர் ஆர்.எஸ்.கே. ரகுராம், முதல்வர் முனைவர் D.வாசுதேவன் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 100 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
CATEGORIES திண்டுக்கல்