மாவட்ட செய்திகள்
மேட்டூர் அணை பாசனப் பகுதிக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க மூத்த வேளாண் வல்லுநர் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில் ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறப்பு குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது இதைப்போல் நடப்பு ஆண்டு மேட்டூர் அணை பாசன பகுதிக்கு பாசனத்திற்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி அணையை திறக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய 167.25 டிஎம்சி நீரையும் ஆரம்ப இருப்பாக உள்ள 65 டிஎம்சி நீரையும் சேர்த்து மொத்தம் 232.25 டிஎம்சி நீரையும் வைத்துக்கொண்டு வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம் என்று தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு கலைவாணன்( ஓய்வு) பரிந்துரை செய்துள்ளார்.



மேலும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயிகள் நாற்று விடலாம் என்றும் குறுவை சம்பா பருவங்களில் அதிக அளவில் நேரடி நெல் விதைப்பு செய்திடவும், வடகிழக்கு பருவ மழையால் பயிர் சேதம் இல்லாமல் இருக்க குறுகிய கால ராகங்கள் மே முதல் ஜூன் முடிய சாகுபடி செய்யவும், நீண்டகால ரகங்கள் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 7 வரை சாகுபடி செய்யவும், மத்திய கால இரகங்கள் செப்டம்பர் மாதம் முழுவதும் சாகுபடி செய்யவும் விவசாயிகளுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது முன்னதாக மேட்டூர் அணை பாசன பகுதி பயிர் சாகுபடியும் நீர்வழங்கல் திட்டமும் என்ற புத்தகத்தினை மூத்த வேளாண் வல்லுநர் குழு வெளியிட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
