BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதையில் மாஜி ராணுவ வீரர் ரகளை.

 

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது இதில் சின்னபாலம்பாக்கத்தை சேர்ந்த தம்பதியினர் அளித்த மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் அதில் உள்ள விவரங்களின்படி தம்பதியிடம் விசாரித்தார். அந்த சமயத்தில் மனு அளிக்க வந்த ஆண் ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடி வந்தால் அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

உடனே போலீ சார் அவரை வெளியே அழைத்துச்சென்று விசாரனை மேற்கொண்டனர் அதில் அந்த நபர் வேலூர் அடுத்த சின்னபாலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வேல்முருகன், அவரது மனைவி சுபாஷினி, சொத்து பிரச்னை சம்பந்தமாக மனு அளிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகன் மீது தண்ணீரை ஊற்றி போதையை தெளிய வைத்த சத்துவாச்சாரி போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )