BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பள்ளிவாசல் விரிவாக்க செய்ய பணம் வசூல் செய்து மோசடி செய்த இமாம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்லாமியர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஐஜியிடம் புகார் மனு அளித்தனர்.

பள்ளிவாசல் விரிவாக்க செய்ய பணம் வசூல் செய்து மோசடி செய்த இமாம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்லாமியர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஐஜியிடம் புகார் மனு அளித்தனர்.

திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை பகுதியில் 50 வருடமாக மஜ்ஜினூர் பள்ளிவாசல் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிவாசலில் தற்பொழுது தலைவராக பதவி வகித்து வரும் அப்துல் கபூர் இன்று காலை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனை 50க்கும் மேற்பட்டோருடன் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த பள்ளிவாசல் தலைவர் அப்துல்கபூர்.

சுமார் ஐம்பது வருடமாக திருச்சி பொன்மலை அடுத்துள்ள கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மஜ்ஜினூர் பள்ளிவாசலில் இமாம்மாக (மதகுரு)
செயல்பட்டு வந்தவர் முகமது இப்ராஹிம் சாதிக். இவர் பள்ளிவாசல் விரிவாக்கப்பட வேண்டும் எனக்கூறி துபாய், சவுதி, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு
8 முறைகளுக்கு மேல் சென்று பள்ளிவாசல் பெயரில் பணம் வசூல் செய்து வந்தார். இதுதொடர்பான எந்தவிதமான வரவு செலவு கணக்குகளை பள்ளிவாசலில் அவர் கொடுக்கவில்லை. தற்போது நிர்வாகத்தை நாங்கள் எடுத்து வந்தோம். வரவு செலவு கணக்கு கேட்கும் போது மிரட்டல் தொனியில் பதில் சொல்லாமல் இரண்டு மாதமாக எந்தவித பதிலும் சொல்லாமல் வேலையைவிட்டு நிற்பதாக தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.


இந்நிலையில் திருச்சி மாவட்டம், அரியாமங்கலம் அடுத்துள்ள எஸ்ஐடி பகுதியில் சுமார் 35இலட்சம் செலவில் இடத்தை வாங்கி உள்ளார். எங்கள் பள்ளிவாசல் சொந்தமான பணத்தை எடுத்து இந்த இடத்தை வாங்கி உள்ளார் என்பதல் அவரிடம் கணக்கு கேட்டால் மிரட்டல் விடுகிறார்.
இதுதொடர்பாக ஜமாத், டவுன் ஹாஜி ஆகியோருடன் முறையிட்டும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.
மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்த விசாரணை செய்யப்படவில்லை.


எனவே, முகம்மது இப்ராஹிம்சாதிக் தற்பொழுது புதிய தாருசலாம் என பெயரில் ட்ரஸ்ட் ஆரம்பித்து அதன் மூலம் வெளிநாடுகளில் சென்று பல கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த இரண்டு வருடமாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் இன்று மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் சந்தித்து மனு அளித்துள்ளோம் என தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )