BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட் சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். சமையல் எரிவாயு சிலிண் டர் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் அ.சரோஜா தலைமையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமராஜ், நகர துணை செயலாளர் முனியசாமி. அலாவுதின், நகர குழு உறுப்பினர்கள் ராஜி,சண்முகவேல், தாலுகா செயலாளர் பாபு, மாதர் சங்கம் கோமதி, விஜயலட்சுமி, வஜ்ரேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )