மாவட்ட செய்திகள்
கிளியூர் ஊராட்சியில் நிதி பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 100 நாள் வேலையை மீண்டும் தொடர்ந்து வழங்க கோரி 100 நாள் வேலை பணியாளர்கள் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக பணி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊராட்சியில் நிதி பற்றாக்குறையால் 100 நாள் வேலை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 100 நாள் வேலை பணியாளர்கள் தங்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி, விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் சங்கிலி முத்து, முருகேசன் ஆகியோர் தலைமையில் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் கிளியூரில் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
