BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மாநாடு, கிளைகள் இணைந்த மாநாடு, குப்தா நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சேவை கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் C.P.சுபா துணைபொதுமேலாளர்கள் அண்ணாதுரை, காங்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பிஎஸ்என்எல் திட்டங்கள், பிஎஸ்என்எல் வருவாயை பெருக்குவது, 4ஜி சேவையை வழங்குவது, செலவினங்களை குறைப்பது குறித்து விளக்கவுரை நிகழ்த்தினர்.

இதையடுத்து முப்பெரும் விழா தீர்மானங்களில்

*நேரடி நியமண ஊழியர்கள் பிரச்சனையில் பணியிட மாறுதலை விரைவாக செய்து தர வேண்டும்.

*நேரடி நியமன ஊழியர்கள் பதவி உயர்வில் தற்போது அறிவிக்கப்பட்ட பதவிகள் குறைவாக உள்ளது எனவே கூடுதல் பதவிகளை அறிவித்து தேர்வு நடத்த வேண்டும்

*மூன்றாவது ஊதிய மாற்றத்தை காலதாமதபடுத்தாமால் உடனடியாக வழங்க வேண்டும்.

*பிஎஸ்என்எல் வருவாயை பெருக்க அனைத்து 2ஜி4ஜி சேவைகளை 4ஜி5ஜி சேவையாக உயர்நிலை படுத்த வேண்டும்

*ஊழியர்களின் ஊதிய தேக்க நிலையை களைவது

*எப்.டி.எச்.இணைப்புகளை விரிவாக்கம் செய்வது

*சேவை பராமரிப்பில் கிளஸ்டர் முறையில் உள்ள குளறுபடிகளை களைவது உள்ளிட்ட ஏழு தீர்மானங்களை தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் முப்பெரும் விழா தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )