BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலையில் வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய வருவாய் கோட்டாட்சிரை கண்டித்து வழக்கறிஞர்கள் , கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம்.

உடுமலையில் வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய வருவாய் கோட்டாட்சிரை கண்டித்து வழக்கறிஞர்கள் , கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம்.
வருவாய் கோட்டாட்சியர் கீதா அவர்களை சிறைப்பிடித்தும் முற்றுகை யிட்டும் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பணியாற்றிவரும் பிரபாகரன் என்பவர் வழக்கு சம்மந்தமாக வட்டாட்சியர் அலுவலகம் சென்றபோது அங்கு இருந்த வருவாய் கோட்டாட்சியர் கீதா வழக்கறிஞரை மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது .

பின்னர் இதுகுறித்து வழக்கறிஞருக்கும், கோட்டாட்சியருக்கும் அலுவலகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய வருவாய்க் கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் , மன்னிப்பு கேட்கும் வரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் கீதா அவர்களை சிறைப்பிடித்தும் முற்றுகை யிட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாசாங்சாய் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் ஆகியோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வருவாய் கோட்டாட்சியர் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்ததது. உடுமலையில் வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய வருவாய்க் கோட்டாட்சியரை கண்டித்து நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )