BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ஏராளமான மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ளனர். மேலும் இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறையைப் பயன்படுத்தி அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை குற்றவாளிகள் மற்றும் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் சுமார் 50 பேர் ஜெயிலில் இருந்து தப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பயங்கரவாதிகள் அகதிகள் போல் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்ட கடற்கரை முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும் ரோந்து கப்பல் மற்றும் படகு மூலம் போலீசார் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான் தீவு முயல் தீவு நல்ல தண்ணி தீவு போன்ற தீவுப் பகுதிகளில் தப்பி வருபவர்கள் மறைந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த தீவு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )