மாவட்ட செய்திகள்
மலையாண்டிபட்டினம் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் கோவில் திருவிழா:

உடுமலை அருகே உள்ள குரல்குட்டை மலையாண்டிபட்டினம் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் கோவில் பதினோராம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 3ஆம் தேதி நோன்பு சாட்டப்பட்டு துவங்கிய திருவிழாவில் முதல்நாள் திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு சண்டா மூங்கில் எடுத்து வந்து நடும்நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு கும்பம் தாளித்தல் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரண்டாம் நாள் அதிகாலை முளைப்பாரி மாவிளக்கு எடுத்தலும் காலை 7 மணிக்கு கிடாவெட்டு மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு பூவோடு எடுத்தல் தொடர்ந்து இரவு 9 மணிக்கு சக்தி கும்பம் கிணற்றுக்குள் எழுந்தருளல் இரவு 12 மணிக்குமேல் முனீஸ்வரன் பூஜையும் நடைபெற்றது. திருவிழாவையொட்டி உச்சிமாகாளி அம்மனுக்கு பல்வேறு வகை அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது நிறைவு நாளன்று உச்சிமாகாளி அம்மனுக்குஅபிஷேகம் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் நீராடுதலுடன் கோவில் நடை சாத்தப்பட்டது இதில் மலையாண்டிபட்டினம் குரல்குட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
