BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கொரோனாவிற்கு பிறகு அறிவியல் தொழிநுட்பத்தில் உலக நாடுகளின் பார்வை இந்தியா பக்கம் திரும்பி உள்ளது என முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.

கொரோவுக்கு பிறகு அறிவியல் தொழிநுட்பத்தில் உலக நாடுகளின் பார்வை இந்தியா பக்கம் திரும்பி உள்ளது என முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.

தஞ்சாவூரில் மருதுபாண்டியர் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி இடையே உயிரியல் தொழில்நுட்பம் உயர்நிலை ஆராய்ச்சிகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் இஸ்ரோ சந்திராயன் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார் .

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவிற்கு பிறகு அறிவியல் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. எனவே அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும், உலகளவில் ஒவ்வொரு துறைகளும் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு ஆராய்ச்சி மனப்பான்மையும் கட்டமைப்பும் அவசியமாக உள்ளது என்று தெரிவித்தார்.

பேட்டி.மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் திட்ட இயக்குனர் சந்திராயன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவர்.

 

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )