BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்தள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பிரதோசம், பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அப்போதைய நாட்களில் மழை பெய்தாலோ அல்லது மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தாலோ அனுமதியை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிப்பது வழக்கம்.

இந்நிலையில் நாளை முதல் 4 நாட்கள் வரை சதுர கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நாளை (13ம் தேதி) முதல் வருகிற 16ம் தேதி வரையிலான 4 நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

குறிப்பிட்ட இந்த நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் பட்சத்தில் பக்தர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனத்திற்காக சதுரகிரிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. கோவிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவில் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரணத்தால் பக்தர்கள் இரவில் அங்கு தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 2 வருடங்களில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )