மாவட்ட செய்திகள்
ஆல் தி சில்ரன் தொண்டு நிறுவனம் மற்றும் ஒடுகத்தூர் சமுதாய சுகாதார நிலையம் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா.
ஆல் தி சில்ரன் தொண்டு நிறுவனம் மற்றும் ஒடுகத்தூர் சமுதாய சுகாதார நிலையம் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா ஆடோன் தனியார் நர்ஸிங் கல்லூரியில் நடைபெற்றது
அனைத்து துறைகளிலும் முதல்முதலில் கால் பதித்த பெண்கள் குறித்தான கேள்வி மாணவிகளிடம் கேட்கபட்டு பரிசுகள் வழங்கபட்டது.
தமிழகத்தில் சேலம்,கோவை, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, வேலூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆல் தி சில்ரன் தொண்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பள்ளிகொண்டா பகுதியிலுள்ள ஆடோண் நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மகளிரும் மருத்துவமும் என்கிற தலைப்பில் மணவிகளிடத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் அணைக்கட்டு வட்டார மருத்துவ அலுவலர் கைலாசம் தலைமையில் நடைபெற்ற விழாவில் மகளிருக்கான மாநில அரசு மற்றும் மத்திய அரசு இட ஒதுக்கீடுகள் குறித்தும் பெண்களுக்கான உரிமைகள் குறித்தும் கருத்தரங்கில் பேசப்பட்டது மேலும் இதனைத் தொடர்ந்து மணவிகளிடத்தில் அனைத்து துறைகளிலும் முதல்முதலில் கால் பதித்த பெண்கள் குறித்தான கேள்விகள் மாணவிகளிடம் கேட்கபட்டு சரியான விடைகள் கூறிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது.
தமிழகத்தில் சேலம்,கோவை, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, வேலூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆல் தி சில்ரன் தொண்டு நிறுவனத்தின் நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதியில் மாணவியர் மற்றும் பெண் ஆசியர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளபட்டது.