BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல் நிலையங்களில் தானியங்கி நாப்கின் வழங்கும் எந்திரம் வைப்பு.

தஞ்சாவூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு பயன்படும் வகையில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் உபயோகிக்கப்பட்ட நாப்கினை எரிக்கும் எந்திரம் ஆகியவை பெண் காவலர்கள் பணிபுரியும் 5 காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டது .

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், திருவையாறு, தஞ்சாவூர் மற்றும் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மற்றும் ஆயுதப்படை வளாகம் ஆகியவற்றில் தானியங்கி நாப்கின் வழங்கும் எந்திரங்கள் பொருத்தப்பட்டது.

உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட இயந்திரத்தை தஞ்சை சரக டிஐஜி கயல்விழி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா ஆகியோர் பயன்பாட்டிற்கு இக்கருவியை தொடங்கி வைத்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )