BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்காவில் உள்ள பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்காவில் உள்ள பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள ராமசாமி தாஸ் பூங்கா நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இதில் சிறுவர்கள் விளையாடுவதற்கும் மூத்த குடிமக்கள் நடைபயிற்சிக்கும் ஏற்றதாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த இடத்தில் அறிவுசார் மையம் அமைக்கும் பணிக்காக பூங்காவில் உள்ள மரங்களை அகற்றும் பணி நடைபெற இருப்பதாக தெரிய வந்தத யடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூங்காவின் எதிரே நகராட்சியை கண்டித்து பாஜக நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில், நகர பொதுச் செயலாளர் முனியசாமி, நகர பொதுச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் லட்சுமண குமார் மாநில துணைத் தலைவர் ராஜ்குமார், முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூங்காவை அழிக்காமல் மக்களின் பயன்பாட்டிற்கே விட வேண்டும், மரங்களை அகற்றிவிட்டு மையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும், மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்‌.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சேது ராஜ், நகரச் செயலாளர் சேஷாத்ரி நகரமன்ற உறுப்பினர் விஜயகுமார், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை தலைவர் சிவன் பாண்டியன், வழக்கறிஞர் அணி நகர துணை தலைவர் குருநாதன், வழக்கறிஞர் அணி ஒன்றிய தலைவர் மாரிமுத்து, இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் குரு தேவன், அமைப்புசாரா மாவட்ட துணை தலைவர் நல்லதம்பி, செய்தி தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )