BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

விவசாயிகளின் விளைபொருட்களை விற்க விற்பனை கூடங்களுக்கு வாங்க தனி அலுவலர் மற்றும் செயலாளர் அழைப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களான நெல், பருத்தி, பச்சபயறு, உளுந்து, நிலகடலை, தேங்காய் போன்ற விளைபொருட்களை விற்பனை கூடங்களுக்குகொண்டுவந்து தேசிய வேளாண் சந்தையின் மூலம் விற்று அதிக லாபம் பெறலாம்.

வரும் ஜுன் மாதம் முதல் நடைபெரும் பருத்தி மறைமுக ஏலத்தில் பருத்தியை கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்று பயன் அடையுமாறும் மேலும் குத்தாலம் , மயிலாடுதுறை, செம்பனார் கோவில் ,பகுதியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலை திட்டத்தின் மூலம் ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை நடைபெறும் பச்சபயறு, உளுந்து நேரடி கொள்முதல் செய்யபடுவதாலும் விவசாயிகள் முன்பதிவு செய்து பயன் பெறவேண்டும் என. விவசாயிகளுக்கு தனி அலுவலர் சங்கர நாராயணன் மற்றும் விற்பனைகுழு செயலாளர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )