மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்காவில் அறிவுசார் மையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணிகள் 2 கோடியை 40 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை.

கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்காவில் அறிவுசார் மையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணிகள் 2 கோடியை 40 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை கோவில்பட்டி சேர்மன் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே ராமசாமி தாஸ் பூங்கா நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இதில் சிறுவர்கள் விளையாடுவதற்கும் மூத்த குடிமக்கள் நடைபயிற்சிக்கும் ஏற்றதாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இடத்தில் 2 கோடி மதிப்பிலான அறிவுசார் மையம் அமைக்கும் பணிகளை பூமி பூஜை நடைபெற்றது.

இதில் கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி கலந்துகொண்டு பணிகளை அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.தொடர்ந்து 40 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் வாரிய வளாகத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணியினை கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் நடைபெற்றது. வைத்தார்.நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம், சுகாதார அலுவலர்கள் நாராயணன், நகராட்சி பொறியாளர் ரமேஷ், உதவிப் பொறியாளர் சுரேஷ், மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா,சீனிவாசன், சித்ராதேவி மகேந்திரன், விஜயன், கருப்பசாமி, சண்முகவேல், கருப்பசாமி,ஜோதி பாஸ்,உமா மகேஸ்வரி, மணிமாலா, முத்துலட்சுமி,கனகலட்சுமி, புவனேஸ்வரி, செண்பக மூர்த்தி, முத்துலட்சுமி, விஜயகுமார்,உள்ளிட்ட பலர், கலந்து கொண்டனர்.
