BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மடத்துக்குளம் கிராமங்களில் கடந்த பல வருடங்களில் இல்லாத அளவிற்கு கோடை வெயில் காலம் துவங்கும் முன்பே தற்போது வெயில் கொளுத்தி வருகின்றன.

மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த பல வருடங்களில் இல்லாத அளவிற்கு கோடை வெயில் காலம் துவங்கும் முன்பே தற்போது வெயில் கொளுத்தி வருகின்றன,

இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள சிறியோர் மற்றும் முதியோர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் கூறும்போது: வெயிலுக்கு ஏற்ற கதர் ஆடைகளையும் மற்றும் கண்களுக்கு இதமான கண்ணாடிகளையும், அணிந்து செல்வது நலம் தரும். மேலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி பழங்கள் மற்றும் வெள்ளரி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, போன்ற நீர் சத்து அதிகம் உள்ள பழங்களை உண்ணுவது, உடலில் அதிகப்படியான நீரை தக்க வைக்கும்.

இதனால் உடலில் எப்போதும் குளிர்ச்சி பெறும்.

கோடை காலம் முடியும் வரை மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில், வெளியில் எங்கும் செல்லாமல் இருப்பது, தமது உடலை காத்துக் கொள்ள ஏதுவாக அமையும் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )