BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

5-மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-மாநிலங்களில் பாஜக மற்றும் இந்து முன்னனியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

5-மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் நிலையில் நிலக்கோட்டையில் பாஜக மற்றும் இந்து முன்னனியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நடைபெற்று முடிந்த 5- மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப்பைத் தவிர உத்திரபிரதேசம், கோவா, உத்தர்க்காண்ட், மணிப்பூர் ஆகிய 4- மாநிலத்தில் பாரதிய ஜனதா வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயலாளர் இராமகிருஷ்ணான் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் இந்து முன்னணியினர் 4-ரோடு சந்திப்பில் பட்டாசு வெடித்து வெற்றிக் கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் பின்னர் சாலையில் இருந்த பொது மக்கள், வாகன ஓட்டிகள்,வணிக நிறுவனங்கள் என இனிப்புகள் வழங்கினர். நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்து முன்னனி நிர்வாகிகர் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )