BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

குமரிமாவட்ட சமூக நல அதிகாரியிடம் தனது பாலினம் குறித்து கேளி செய்து தனது பெற்றோரை பார்க்க விடாமல் தடுக்கும் சகோதரன் மீது புகார்.

குமரிமாவட்ட சமூக நல அதிகாரியிடம் தனது பாலினம் குறித்து கேளி செய்து தனது பெற்றோரை பார்க்க விடாமல் தடுக்கும் சகோதரன் மீது புகார்- மேலும் தனது தாய் தந்தையை சந்திக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என சமூக நல அதிகாரியிடம் கோவளம் பகுதியை சேர்ந்த திருநங்கை ஓவியா மேரி மனு.

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கடற்கரை கிராமத்தை சேர்ந்த அருளானந்தம்-பிலோமினாள் தம்பதியின் மகளான திருநங்கை ஓவியா மேரி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அதிகாரியிடம் தனது பெற்றோரை பார்க்க விடாமால் தடுக்கும் சகோதரன் மீது புகார் அளித்தும் பெற்றோரை பார்க்க ஏற்பாடு செய்து தர வேணடும் என கேட்டும் குமரிமாவட்ட சமுக நல அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்,தான் 20 வயது வரை தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் எனது பாலினம் சார்ந்த பிரச்சனைகளால் சென்னை சென்று அறுவை சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறினேன்,பின்பு சென்னையில் மேட்ரோவில் பணியாற்றி வந்தேன்,மேலும் தனது தாய் தந்தையை பார்ப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கடற்கரை கிராமத்திற்கு வருகின்றபோது தனது சகோதரர்கள் தன்னை திருநங்கை என்ற காரணத்தினால் கேளி செய்து தன்னை சேர்த்துக் கொள்ளாமல் விரட்டி அடிக்கின்றார்,இதனால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன் ஆகவே தனது தாய் தந்தையை சந்தித்து அவருடன் பழக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அதிகாரியிடம் திருநங்கை ஓவியாமேரி மனு அளித்துள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )