BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஆத்தூர் LIC  அலுவலகம் முன்பு LIC ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யும் முடிவை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்.

ஆத்தூர் LIC அலுவலகம் முன்பு அலுவலகம் முன்பு LIC ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யும் முடிவை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்.

எல்ஐசி நிறுவனத்தில் சுமார் 42 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். இதன் சொத்து மதிப்பு சுமார் 35 லட்சம் கோடி. மத்திய அரசின் ஆரம்ப கட்ட முதலீடு 5 கோடி ரூபாய். இந்த 5 கோடி முதலீட்டிற்கு ஈவு தொகையாக இதுவரை மத்திய அரசிற்கு எல்ஐசி வழங்கிய தொகை சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய்.நாட்டு நலத்திட்டங்கள், ஐந்தாண்டு திட்டங்கள் மக்கள் நலத் திட்டங்கள் என இதுவரை செய்த முதலீடுகள் சுமார் 32 லட்சம் கோடி. இத்தகைய நிறுவனத்தின் பங்குகளை பட்டியல் இடக்கூடாது என மத்திய அரசு ஊழியர்கள் மத்திய தொழிற்சங்கங்கள் வங்கி இன்சூரன்ஸ் அமைப்பு உள்ளிட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உட்பட நாடெங்கும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் எல்ஐசி அலுவலகம் முன்பு எல்ஐசி ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யும் முடிவை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி எல்ஐசி ஊழியர் சங்கத் தலைவர் பாலமுருகன் தலைமையில் போராட்டத்தில் அவர்கள் மத்திய அரசை எல்ஐசி பங்குகளை விற்காதே எல்ஐசி பங்கு விற்பனை தேசத்துரோகம் எனவும் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் எல்ஐசி ஊழியர் சங்க தலைவர் பாலமுருகன் செயலாளர் பழனிவேல் வளர்ச்சி அதிகாரி காமராஜ் ஊழியர்கள் முகவர்கள் சங்கம் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )