BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே சொத்துக்காக தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற மகன் கைது.

முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துவேல் (60), இவருக்கு சாந்தகுமார்(36), முரளிதரன்(31) என இரு மகன்கள் உள்ளனர். சாந்தகுமார் சென்னையில் வசித்து வருகிறார். முரளிதரன் திருமணம் ஆன நிலையில் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் தன் மனைவியுடன் தந்தை முத்துவேலுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 9ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து மூத்த மகன் சாந்தகுமார் தந்தையை பார்க்க வெள்ளாளப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தந்தை முத்துவேலிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கையில் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தந்தை முத்துவேல் மீது ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார்.

இதில் முத்து வேல் அலறி துடித்து உள்ளார். முத்துவேல் சத்தம் போட்டதை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர்
முத்துவேலுவை காப்பாற்றியுள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன்
முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். முத்துவேல் ஜெகநாதபுரம் காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் போலீசார் சாந்தகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் . சொத்து தகராறு காரணமாக பெற்ற தந்தையை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )