மாவட்ட செய்திகள்
முதல் ஆண்டு மருத்துவக் கல்வி மாணவர்களை பெற்றோர்களுடன் சேர்த்து ரோஜா பூவைக்கொடுத்து வரவேற்ற தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கானாவிலக்கில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது . இக்கல்லூரியில் நடப்பாண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர ஒதுக்கப்பட்டுள்ள 100 இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்கள் வகுப்பிற்கு வந்தனர் .
இவர்களை தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தலைமையில் துறைத்தலைவர்கள் மற்றும் பெண்மருத்துவர்கள் ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக அவர்களது பெற்றோர்களுடன் சேர்த்து வரவழைத்து அவர்களுக்கு ரோஜாப்பூவை கொடுத்து வரவேற்பு அளித்தனர் . மேலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் மருத்துவ ஸ்டெத்தாஸ்கோப் மற்றும் வெள்ளைநிற மருத்துவக்கோட் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது .
மேலும் மருத்துவக்கல்லூரியின் சிறப்பம்சங்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் மருத்துவகல்லூரி அமைந்துள்ள இயற்கைச் சூழலான அமைவிடம் குறித்தான குறும்படம் ஒளிபரப்பப்பட்டது . இதையடுத்து மருத்துவ மாணவர்களுக்கான உயிர்காக்கும் ஒழுக்க நடைமுறை மருத்துவ ரகசியகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது . மருத்துவ மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மருத்துவக்கல்லூரி சார்பில் இனிப்புகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.