BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஐந்து மலைகளை கடந்து ஆறாவது மலை மீது அமைந்திருக்கும் 40க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அடிப்படை வசதியின்றி பரிதவிக்கும் மலைவாழ் மக்கள்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்க கூட 15க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு வருகை தரவேண்டிய சூழல்.

தங்களுக்குத் தேவையான உணவு பொருட்களை விளைவிக்க எண்ணினாலும் நீரில்லாமல் அவதி.

போர்வெல் அமைத்து விவசாயம் பண்ண எண்ணினாலும் வனத்துறையினர் தடுத்து போர்வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என கூறும் விவசாயி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள 40க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் ஒன்றுதான் கோரத்தூர் மலை கிராமம் பிஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த மலை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மலை கிராமமானது ஒடுகத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் 5 மலைகள் தாண்டி 6வது மலை மீது உள்ளது. இந்த மலை கிராமத்திற்கு பொதுமக்கள் சென்று வர சரியான சாலை வசதியும் கிடையாது அதேபோல் பேருந்து வசதியும் கிடையாது.

இந்த மலை பகுதி சுற்றிலும் சுமார் 40க்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளது இதில் 3000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )