BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வீதியில் இறங்கிய புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் 2 ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்காததால் ஆவேசம்.

2 ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் அரசு போக்குவரத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்கன், நடத்துநர்கள் என 800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து ஊழியர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி நகரம் மற்றும் வெளியூர்களுக்கு செல்லக்கூடிய 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். ஊழியர்கள், பணிமனையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். உடனடியாக போனஸ் வழங்கக் கோரியும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

 

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஈடுபட்டதை அடுத்து பிஆர்டிசி பணிமனையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )