BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு குழந்தைகளை கட்டிப் போட்டு ஒரு குழந்தையை கத்தியால் குத்திக் காயப்படுத்தி விட்டு கணவர் தற்கொலை.

நாகர்கோவிலில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு குழந்தைகளை கட்டிப்போட்டு ஒரு குழந்தையை கத்தியால் குத்திக் காயப்படுத்தி விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டபரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் ஜோஸ் சான் பியர் இவர் மனைவி வனஜா ( வயது 32 )இவர்களுக்கு மஞ்சு (வயது 13) அக்ஷரா ( வயது 12 )ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர் ஜோஸ் சான்பியர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார் கடந்த டிசம்பர் மாதம் இவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார் இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த சனிக்கிழமை தகராறு நடைபெற்றுள்ளது இதை தொடர்ந்து வனஜாவை ஜோஸ் சான் பியர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் அவரது உடலை கட்டிலுக்கு அடியில் போட்டு விட்டு அவரது 2 பெண் குழந்தைகளையும் வாயில் துணியை வைத்து அடைத்து கட்டிப் போட்டுள்ளார் இன்று காலை அவர்களில் ஒரு குழந்தையை கத்தியால் குத்தியுள்ளார் இதில் காயமடைந்த மஞ்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் ஜோஸ் சான் பியர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு உடல்களையும் கைப்பற்றினர் இதில் வனஜா உடல் அழுகிய நிலையில் இருந்தது இரண்டு உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )