மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் புதரில் உட்கார்ந்திருந்த 6 வாலிபர்கள் கைது.சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் நடவடிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்கா சத்திரம் காவல்துறையினர் சுங்குவார்சத்திரம், சந்தவேலூர், திருமங்கலம் ஆகிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது,
சிறு மாங்காடு செல்லும்போது சிறு மாங்காடு சாம்சங் கம்பெனி பின்புறம் உள்ள முட்புதரில் 6 வாலிபர்கள் கொடுமையான கத்தி உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களையும் உட்கார்ந்து ஆலோசனையிலீ ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த ரோந்து பணி காவலர்கள் ஆறு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த பயங்கரமான ஆயுதங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது இவர்கள் காஞ்சிபுரம் வையாவூர் தினேஷ் வ/30, திருமங்கலம் பகுதியை சேர்ந்த விஜய் வ/22 ,சதீஷ் வ/23, ஜெயக்குமார் வ/24, வினோத் வய/22, காஞ்சிபுரம் சாத்தான் கோட்டை தெருவை சேர்ந்த கண்ணன் வ/27 என்பது தெரியவந்தது. இவர்கள் ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.