மாவட்ட செய்திகள்
ஒரே நாடு ஒரே மொழி என்பதை மாற்றியமைக்க துடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சியின் கணவை தவிடுபொடியாக்கும் நிலையை உருவாக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்.
ஒரே நாடு ஒரே மொழி என்பதை மாற்றியமைக்க துடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சியின் கணவை தவிடுபொடியாக்கும் நிலையை உருவாக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் இந்தத் திட்டம் 100% தோல்வியடையும் என கோவில்பட்டியில் தமிழ்ப்பேரரசு கட்சி பொதுச் செயலாளர்
கௌதமன் பேட்டி.
தமிழ்ப்பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கோவில்பட்டி நகர் மன்ற தலைவராக பதவி ஏற்றுள்ள கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினையும் நகர்மன்ற தலைவர் கருணாநிதியிடம் வழங்கினார். அப்போது நகர்மன்ற ஆணையர் ராஜாராம் உடனிருந்தார்.
அந்த மனுவில் வீரவாஞ்சி நகர் பகுதி மக்களுக்கு விரைந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வீரவாஞ்சி நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் இருபுறமும் கழிவு நீர் வாறுகால் அமைக்க வேண்டும், வீரவாஞ்சி நகர் 7,8,9 ஆகிய தெருக்களில் சாலை அமைக்க வேண்டும், வீரவாஞ்சி நகர் பகுதியில் உள்ள இடுகாட்டில் சுற்றுசுவர், குளியல் மற்றும் உடை மாற்றும் அறை அமைத்து தர வேண்டும், கோவில்பட்டி இளையரசனேந்தல் ரெயில்வே சுரங்க பாலம் அருகே நடராஜபுரம் தெருவில் கனரகன வாகனங்கள் செல்லும் வகையில் அகலமான சேவை சாலை அல்லது நிரந்தர மாற்று பாதை அமைத்து தர வேண்டும், மேலும் அப்பகுதியில் உள்ள எரிவாயு தகன மயானத்தினை முறையாக பாரமரிப்பு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதில் தமிழ்ப்பேரரசு கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன், வடக்கு மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமார், வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இசக்கிமுத்து, வடக்கு மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் கோவிந்தராஜ், நகர மாணவரணி செயலாளர் சரவணன், தென்காசி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், சேசைய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் திரைப்பட இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான கெவுதமன் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறுகையில் :
தமிழகத்தில் எந்த தேசிய கட்சிகளுக்கும் இடமில்லை தமிழகத்தில் என்ன உரம் போட்டாலும் பாரதிய ஜனதா கட்சி வளராது. ஐந்து மாநிலத்தில் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை வரலாற்றை அழிக்க துடிக்கிற தேசிய கட்சி ஒரு போதும் காலூன்ற முடியாது விரல் லூன்றவும் முடியாது.
ஒரே தேர்தல்
என்பது இந்திய ஒன்றியத்திற்கு பேரழிவை கொடுக்கும்
பல்வேறு தேசிய மொழிகள் இருக்கும் இந்தியாவில் ஒரே நாடு ஒரே மொழி என்பதை மாற்றி மாற்றியமைக்க துடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சியின் கணவை தவிடுபொடியாக்கும் நிலையை உருவாக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் இந்தத் திட்டம் 100% தோல்வியடையும்.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நிலைதடுமாறி இருக்கு அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவே அலைந்து கொண்டிருக்கின்றனர் தலைமை இல்லாமல் இருக்கிறது அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே ஓடுகின்றனர் அவர்கள் கட்சியை காப்பாற்றுவதை
விட தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே ஓடுகின்றனர் ஒரு பக்கம் ரெய்டு என ஓடுகின்றன.
பாஜகவின் வெற்றி என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய ஒன்றியத்தில் எங்கு நடந்தாலும் அது நேர்மையான வெற்றியா என்றால் அது கேள்விக்குறி பிஜேபி அடைகின்ற வெற்றி அனைத்திலும் ஒரு சூழ்ச்சி இருக்கும் என்றார் அவர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.