மாவட்ட செய்திகள்
உளுந்தூர்பேட்டை மணப்புரம் பைனான்ஸ் நூதனமுறையில் நகை மோசடி .

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை களமருதூர் கிராமத்தில் வசித்து வரும் குமாரசாமி தந்தை பெயர் அருணாசலம்
இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இவரது நகை 500 கிராம் உளுந்தூர்பேட்டையில் இயங்கி வரும் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்தார்.சில மாதங்கள் கழித்து தனது அடகு வைத்த நகைக்கு வட்டி கட்ட மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் உங்களது நகை ஏலம் விடப்பட்டது என்று கூறினார்.
இந்த செய்தியை கேட்டு குமாரசாமிக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது.
உடனடியாக கிளை மேலாளர் அவரிடம் தனது நகை விவரங்கள் கேட்டறிந்தார். கிளை மேலாளர் தீபன் சரியான விளக்கம் தரவில்லை
நகை உரிமையாளர் பல முறை மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் பேசி வந்தார்.
அந்த நிறுவனம் நீங்கள் அடகு வைத்து போது இருந்து கிளை மேலாளர் தீபன் இல்லை என்று கூறினார்.
இதை அடுத்து குமாரசாமி கள்ளக்குறிச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உளுந்தூர்பேட்டையில் இயங்கி வரும் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது உரிய வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி எனது நகையை மீட்டுத் தருமாறு கோரிக்கை கடிதம் கொடுத்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
