BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே வீட்டில் பரவிய தீ – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி.

திருச்சி மாவட்டம், முசிறி சாலியர் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி சிவகாமி (70) காலை எதிர்பாராத விதமாக தீ பிடித்தது தீயில் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது.

அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் முசிறி தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி கிராம நிர்வாக அலுவலர் அவருக்கு 2சேலை அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார். மேலும் அவருக்கு மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தங்கள் சொந்த பணத்தில் இருந்து
ரூ1500 வழங்கினர் .

பின்னர் அவரது வங்கி கணக்கு புத்தகம் புதுப்பிக்கப்பட்டு அதில் ரூ 5,000 வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் விபத்து குறித்து முசிறி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )