மாவட்ட செய்திகள்
பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் அவதி.
உடுமலையிலிருந்து கிளுவங்காட்டூர் வழியாக இயக்கப்படும் பேருந்து வழித்தட எண் 37 மற்றும் 32 A இரண்டு பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இன்று 8.15 மணியளவில் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது என பேருந்தை இயக்காமல் கிளுவங்காட்டூரில் நிறுத்தி விட்டனர். இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர்களும் வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது சம்பந்தமாக கொமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உடுமலை கிளை மேலாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. உடனடியாக இதற்கு தீர்வு காணப்படும் என கிளை மேலாளர் உறுதி அளித்துள்ளார். மீண்டும் இதுபோல் நடைபெற்றால் பொதுமக்கள் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் காலையில் கிளுவங்காட்டூரில் மிகுந்த பரப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.