BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்டபணிகள் குறித்து புத்தாக்க பயிற்சி நடந்தது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்டபணிகள் குறித்து புத்தாக்க பயிற்சி நடந்தது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்புற உள்ளாட்சி பிரதிநிகளுக்கான புத்தாக்க பயிற்ச்சி நடந்தது.

இதில் குழந்தைகளுக்கு ஊட்டசத்த குறைபாடு இல்லாமல் இருக்க சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து வழங்க உரிய ஆலோசனை வழங்கப்படுகிறதா என அப்பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே போல் அங்கன்வாடி மையங்களின் கட்டிடங்கள் தரம் குறித்தும் மற்றும் அங்கு வழங்கப்படும் உணவுகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இதன் மூலம் ஊட்டசத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் மாவட்டமாக மாற்ற உள்ளாட்சி பிரதிநிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆலொசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் நகராட்சி சேர்மேன்.
ஒன்றியகுழு தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )