மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் அமைந்துள்ள பால்முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா.
மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் அமைந்துள்ள பால்முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா:- பூம்புகார் எம்.எல்.ஏ. மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு :-
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் பழைமையான முத்துமாரியம்மன் கோயில் சிதிலமடைந்திருந்தது. இக்கோயில் நகராட்சி 29-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரஜினி என்பவரது முயற்சியால் புதிதாக கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவில், மஹா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு கடம் புறப்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கடங்களை சுமந்து கோயிலை சுற்றி வந்து விமானத்தை அடைந்து அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார், நகர திமுக செயலாளரும், நகர மன்றத் தலைவருமான குண்டா மணி என்கிற செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் இளையபெருமாள், இமயநாதன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.